மலையக பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் அழைத்து வரப்படவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க  அமைச்சர் கூறினார்.
 
அவர் பெருந்தோட்டப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டார். இந்தக் கலந்துரையாடல் நேற்று கல்வி அமைச்சின் மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்றது.
இதில் புள்ளி விபரங்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் மலையகத்தில் உன்ள 25 கணித, விஞ்ஞான பாடசாலைகளும், 35பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும். இவற்றுக்கு போதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தபோதிலும், கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பெறுவது கடினமாக உள்ளதென தெரிவித்தார். இது பற்றி இந்திய உயாஸ்தானிகராலயத்துடன் பேசி ஆசிரியர்களை தருவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

 
Top