கல்முனை கல்வி வலய பாடசாலைகளில்  கல்வி கற்கும்  விசேட தேவையுடைய மாணவர்களின்  செயற்பாடும் அவர்களுக்கான பயிற்சி தொடர்பாகவும் ஆராயும் பொருட்டு கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று சந்திப்பொன்று இடம் பெற்றது.
 அலுவலகத்துக்கு   வருகைதந்த  ஜப்பான் நாட்டு  ஜெய்க்கா  தூதுக்குழுவினர் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானாவுடன் கலந்துரையாடல்  நடாத்தி   விசேட தேவை மாணவர்களின்  தேவைகளை கண்டறிய பாடசாலைகளுக்கும் சென்றனர்

Post a Comment

 
Top