அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத் துறை அமைச்சினால் முன்னெடுக்கப் பட்டுள்ள வேலைத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு   கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கி வைத்தார்

நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Post a Comment

 
Top