மருந்து பொருட்களின் விலைகளில் ஏதேனும் குளறுபடிகள் இடம்பெற்றால், அதுகுறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விலைகள் குறைக்கப்பட்ட 48 வகை மருந்துகளின் விலைகளில் ஏதேனும் குளறுபடிகள் இடம்பெற்றால், அதுகுறித்து முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களை சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்களான 0113 071 073 அல்லது 0113 092 269 ஆகியவை மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம். இந்தத் தொலைபேசி இலக்கங்கள் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவு இந்த முறைப்பாடுகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்கும் என்று நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top