கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கும் விழா நாளை ஞாயிற்றுக் கிழமை (23) கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் , கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியயோரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க உட்பட மாகாண கல்வி அமைச்சர்கள் ,கல்வி திணைக்களப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர் .
கருத்துரையிடுக