சிகரெட்டின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பான ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
 
15 வீத வற் வரிக்கு அமைவாக சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும்; என்று அமைச்சர் கூறினார்.
 
ஏற்கனவே புகையிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 90 வீதம் வரை வற் வரியை அதிகரிக்கும் யோசனை பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்களை ஆராய்வதற்கென அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உபகுழுவின் அறிக்கைக்கு அமைய அமைச்சரவையில் ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

Post a Comment

 
Top