ஏ.பி.எம்.அஸ்ஹர்
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று  நடைபெற்றது.
பிரதேசசெயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்தும் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டிலிருந்தும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பனிப்பாளர் கே ராஜதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்
கல்முனை பிரதேசத்தில் உள்ள  சுமார் 50க்கும் மேற்பட்ட கழகங்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top