பாண்டிருப்பு  ஸ்ரீ வட பத்திர காளி  அம்மன்  ஆலய வருடாந்த தீ மிதிப்பு எதிர்வரும் புதன் கிழமை(14) இடம் பெறவுள்ளது .
மகாபாரத  இதிகாச நாயகர்களான  பாண்டவர்கள் பதி எனப் போற்றப் படும்  அருள் வளமும்  திருவளமும்  நிறைந்து  தெய்வருள்  சக்திகளை  தன்னகத்தே  கொண்டு அருளாட்சி செய்யும்  பாண்டிருப்பு புண்ணிய பதியில்   கோயில் கொண்டு  நாடி வரும்  பக்தர்களுக்கு  வேப்ப மர  நிழலில்  மகா சக்தியாக  விளங்கும் அன்னை ஸ்ரீ  வட  பத்திர காளியம்பாளின்  வருடாந்த உற்சவப் பெரு விழா   செவ்வாய்க்கிழமை (06)  திருக்  கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது .

தொடர்ந்து பத்து  நாட்கள் நடை பெறும் கிரியைகளான விசேட அலங்கார பூசைகள் நடை பெற்று  அம்பாள் அழகிய கும்பத்தில்  எழுந்தருளி  வீதி உலா வருதல் , வீர கம்பம் வெட்டுதல் , வாழைக்காய் எழுந்தருளல் பண்ணல்,  பால் குட பவனி ,அம்பாள் முத்துச் சப்பர பவனி வருதல்  என்பன இடம் பெற்று  எட்டாம்   நாள்  செவ்வாய்க்கிழமை (13)  நோற்பு நெல்  குற்றல் ,மகா யாகம் ,நோர்ப்புக்கட்டு  , தீ மிதிக்கும் பக்தர்கள்   கடல் தீர்த்தமாடல் ஆகிய  நிகழ்வுகளுடன்  தீ மூட்டும் வைபவமும் இடம் பெறும் .

09 ஆம் நாள் புதன் கிழமை (14)  அதிகாலை விசேட பூசையுடன்  தீ மிதிப்பு இடம் பெற்று  அதனை தொடர்ந்து  அம்பாளுக்கு  ஆயுத பூசையும்  வாளி  பாடலுடன்  வருடாந்த சக்திப்  பெரு விழா நிறைவு பெறும் .

 எதிர் வரும் 20.09.2016 செவ்வாய்க் கிழமை  இரவு எட்டாம்  சடங்கு நிகழ்வும்  வைரவர் பூசையும் நடை பெறும் என  பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ அரசடி அம்பாள் , ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானங்களின்  பரிபாலன சபையினரும்,  பாண்டிருப்பு  விஸ்வப் பிரம்ம குல இந்து இளைஞர்   மன்றத்தினரும் அறிவித்துள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top