நட்பிட்டிமுனை ஆயுள்வேத வைத்தியசாலை  கட்டிடம்  இடமாற்றம் தொடர்பாக  கிழக்கு சுகாதார அமைச்சு  செயலாளருக்கும் , ஆயுர்வேத  திணைக்கள பணிப்பாளருக்கும்  இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழு  விளக்கம் கோரி  கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக  ஆயுர்வேத  திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு  கடந்த புதன் கிழமை நான்  கேட்டேன்  கடிதம் கிடைத்துள்ளதாக  அறிந்தேன்  நான் இன்னும் கடிதத்தைப்  படிக்கவில்லை .
இந்தக் கட்டிடம் ஆயர்வேத திணைக்களத்துக்கு  சொந்தமானது  இதனை  வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாது . அமைச்சர்  கேட்டுக் கொண்டதற்கு  அமைய  தாற்காலிகமாகவே  விடுவிக்கப் பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார் . 
குறித்த  கட்டிடம்  விடுவிப்பு செய்தமை தொடர்பாக  நட்பிட்டிமுனை பொது மக்கள்   இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்ததை அடுத்து  கிழக்கு சுகாதார அமைச்சு  செயலாளருக்கும் , ஆயுர்வேத  திணைக்கள பணிப்பாளருக்கும்  இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழு  14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 22.08.2016 திகதியிடப் பட்ட   கடிதம் அனுப்பியுள்ளது.

கருத்துரையிடுக

 
Top