அமைச்சர் றிஸாட்
15வருடமாக தூங்கிக் கொண்டிருந்த தலைமைத்துவத்தை , 16 வருடமாக வாக்களித்த மக்களை திரும்பி பார்க்காத ஒரு தலைமைத்துவத்தை 16 வருடம் இந்த மக்களுடைய பசி பட்டினி,பொருளாதாரம்க,ல்வி,பாதை போன்ற இன்னோரன்ன அபிவிருத்திகளைப் பற்றி ஏறிட்டும் பார்க்காத அந்த தலைமைத்துவத்தை இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு வருடத்திற்குள் இந்தப் பிரதேசத்துக்குள் ஓடித் திரிய வைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பிரதேசம் பிரதேசமாக நடமாடும் சேவை செய்கின்ற அளவுக்கு வேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 16 வருடமாக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்காதவர்கள் அபிவிருத்தி செய்வார்களோ இல்லையோ தெரியவில்லை பெரிய பெரிய கற்பனைகளை சொல்கின்ற அளவுக்கு அதை செய்யப் போகின்றோம் இதை செய்யப் போகின்றோம் என்று அடிக்கடி பேசுகின்ற பேச்சையாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேச வைத்திருக்கிறது என்று அமைச்சர் றிஷாட் பதியூதீன் நேற்று கல்முனையில் தெரிவித்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி வினாயகர் ஆலயம் முன்பாக நடை பெற்றது.
நேற்று கல்முனை பிரதேசத்தில் 05 தையல் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்ததன் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இந்த பொதுக் கூட்டம் நடை பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு பேசினார்.
அமைச்சர் எம்.எஸ்.எஸ் .அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் அப்த்துல்லா மஃறூப் உட்பட அரசியல் பிரமுகர்களும் பெருமளவு பொது மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
கருத்துரையிடுக