நட்பிட்டிமுனை  அல் - கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின்  ஏற்பாட்டில்    வியாழக் கிழமை  நேற்று  தையல்  பயிற்சி  நிலையம்  திறந்து வைக்கப் பட்டது . 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி  இளைஞர் அமைப்பாளர் சி.எம்.ஹலீம்  அவர்களின்  ஒருங்கிணைப்பில் கல்முனை மாநகர சபை முன்னாள்   உறுப்பினர்  சி.எம்.முபீத்  தலைமையில் நடை பெற்ற  திறப்பு  விழா நிகழ்வில்  வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நிலையத்தை   திறந்து  வைத்தார் .
நிகழ்வில் அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்  மஹ்ரூப் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர் . 

நட்பிட்டிமுனைக்கு விஜயம் செய்த  அமைச்சர் றிசாத் பதியுதீன்  கைத்தறி நிலையம் மற்றும்  தையல் நிலையங்களையும் பார்வையிட்டார் . கடந்த வருடம் தையல் பயிற்சியை முடித்து  வெளியேறிய யுவதிகள் 40 பேரும்  இவ்வருடம் பயிற்சிக்கு தெரிவான  40 யுவதிகளும் அவர்களது பெற்றோர்களும்  கலந்து கொண்டனர் .
கருத்துரையிடுக

 
Top