இலங்கை கிறிக்கட் கட்டுப்பாட்டுசபை நடாத்தும் அம்பாறை மாவட்ட அணிகளுக்கிடையிலான டிவிசன் III கிறிக்கட் சுற்றுப் போட்டியின் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டாம் சுற்றில் கல்முனை விக்டோறியஸ் அணியிணர் அம்பாரை சதாதிஸ்ஸ அணியினரை 2 விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளனர். 
முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாரை சதாதிஸ்ஸ அணியினர் 34 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றனர். வெற்றிக்கு 141 ஓட்டங்களைப்பெற துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்டோறியஸ் அணியிணர் 24 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஓட்ட இலக்கை எட்டி 2 விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளனர். 
கல்முனை விக்டோறியஸ் அணி சார்பில் நியாஸ் மற்றும் கரன் ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 51 மற்றும் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் கரன் 4 விக்கெட்டுக்களையும் அஸ்பர் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற கல்முனை விக்டோறியஸ் அணியிணர் அடுத்த போட்டியில் உகணை விளையாட்டுக்கழகத்துடன் அம்பாரையில் விளையாடவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top