நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல்  நிருவாகிகள்  கேட்டுக் கொண்டதற்கிணங்க  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  அவர்களினால்  நட்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசலுக்கு  சமீபத்தில்  10 இலட்சம்  நிதி  காத்தான்குடியில்  வைத்து  பள்ளிவாசல் நிருவாகிகளிடம் கையளிக்கப் பட்டது . 

அந்த நிதியின் மூலம்  பள்ளிவாசல் தரைக்கு Tiles பதிக்கும்  வேலைத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப் பட்டது. நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தேவர் ஏ.எல்.நஸீர் கனி தலைமையில்  இடம் பெற்ற  நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ,
  விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்  ஆகியோரும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டு  பணிகளை ஆரம்பித்து வைத்தனர் 


கருத்துரையிடுக

 
Top