(யு.எம்.இஸ்ஹாக் )

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடாத்தவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக மாவட்டம் தோறும் முஸ்லிம் இலக்கிய முன்னோடிகளின் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் முதலாவத சந்திப்பு அம்பாறை மாவட்ட இலக்கிய ஆர்வலர்களுடன் நடை பெற்றது.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கவிஞர் சோலைக் கிளி தலைமையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (26.08.2016 )நடை பெற்றது.

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னா சரிபுத்தீன், செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இச்சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக கருத்துக்’கள் தெரிவித்தளனர்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு டிசம்பர் மாதம் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிஸாத் பதியூதீன் தலைமையில் நடை பெறவுள்ளது.

முஸ்லிம் படைப்பாளிகளால் ஆக்கப்பட்ட மறைந்திருந்த மற்றும் மறைக்கப் பட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்கள் குறித்து வெளியுலகு அறிந்து கொள்ளச் செய்யப்பட்ட  முதலாவது விழா 1966 ஆம் ஆண்டு  மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடத்தப்பட்டு இவ்வருடத்துடன் 50 வருடங்கள் பூர்தியடைகின்ற நிலையில்  50 வது பொன் விழாக் கொண்டாட்டமாகவும்  இந்த நிகழ்வு  இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top