திவிநெகும  திணைக்களத்தில்  நிதி மோசடி செய்த  ஒன்பது அதிகாரிகள்  தொழிலை  இழந்துள்ளனர் .இந்த  சம்பவம்  நாவிதன்வெளி  பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்  நாவிதன்வெளி  பிரதேச  சமுர்த்தி பயனாளிகளுக்கு   வழங்கப் பட்ட  கடன்  தொடர்பில்  நிதி மோசடி செய்ததாக  குற்றம் சாட்டப்  பட்ட திவிநெகும  வங்கி முகாமையாளர் 03 பேரும்  திவிநெகும  உத்தியோகத்தர்கள் 6 பேரும்  பதவி  நீக்கம்  செய்யப் பட்டுள்ளனர்.

இடை நிறுத்தப் பட்டு  விசாரணை செய்யப் பட்டுவந்த  குறித்த ஒன்பது பேருக்கும்  எதிரான தீர்ப்பு  நேற்று வழங்கப் பட்டு  அம்பாறை மாவடட செயலக  திவிநெகும ஆணையாளரின் உத்தரவுக்கமைய   இந்த  பதவி  நிறுத்தம் செய்யப் பட்டுள்ளதாக  திவிநெகும அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top