நட்பிட்டிமுனை மண்ணில் இருந்து முதல் தடவையாக கல்முனை பிராந்தியத்துக்கான காதி நீதிபதியாக தெரிவு செய்யப் பட மௌலவி கே.எல்.நஸ்பர் அவர்களுக்கு நட்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஹுனபா பள்ளிவாசலில் அதன் நிருவாக சபையினரால் ஏற்பாடு செய்யப் பட்ட கெரவிப்பு விழா ஏற்பாட்டுக்கு குழு தலைவர் ஏ.ஏ.அப்துல்   கபூர் தலைமையில் நேற்று முன் தினம் (2016.08.19) மாலை 3.30 மணிக்கு நடை பெற்றது.
மஸ்ஜிதுல் ஹுனபா பள்ளிவாசல் ஆயுட் கால ஆலோசகர் காசிம் பாவா ஹாலித் , ஹுனபா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.கமால், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஜஹாங்கீர் , பிரதி அதிபர் வீ .ஸம்ஸம் , மௌலவி நிஸ்பர் உட்பட பலர் அங்கு நட்பிட்டிமுனை மண்ணுக்கு கிடைத்த இந்த பெரும் பதவி பற்றி புகழ்ந்து உரையாற்றினர்.
நிகழ்வில் காதி நீதிபதி அல் -ஹாஜ் கே.எல்.நஸ்பர் மௌலவி அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப் படடன .
ஹுனபா பள்ளிவாசல் செயலாளர் எம்.எல்.நௌசாத் நன்றியுரை வழங்கினார்

கருத்துரையிடுக

 
Top