கல்முனையில் இன்று (04) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் ,தனியார் போக்கு வரத்து சபை ஊழியர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு  இரு தரப்பாரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாரானபோது உயர்தரப் பரீட்சையை கவனத்தில் கொண்டு கல்முனை பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் அதிகாரிகள் வரவழைக்கப் பட்டு வேலைநிறுத்தப் போராட்டம் கை விடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது கல்முனை தனியார் போக்குவரத்து சபைக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் கல்முனை மாநகர சபையினால் நீண்டகால குத்தகைக்கு அமானா வங்கிக்கு வழங்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று காலை அத்து மீறி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட போதே இந்தமுறுகல் நிலை ஏற்பட்டது. 

தனியார் பஸ் உரிமையாளர்கள் அரச பஸ் தரிப்பு நிலையத்துக்குள் நுளைய முடியாதவாறு டிப்போவில் இருந்த அனைத்து பஸ்களையூம் பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்தி தடையை ஏற்படுத்தினர. இதனால் இன்று காலை கல்முனை நகரம் நெரிசலாக காணப்பட்டது.

Post a Comment

 
Top