( எஸ்.எல். அப்துல் அஸீஸ்) 

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் கொள்கை விளக்க மாநாடு அம்பாறை மாவட்டத்தின்   கல்முனை அஸாத் பிலாசா மண்டபத்தில் நேற்று  (07) இடம்பெற்றது 

இதில் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில்  முஸ்லிம்களின் அபிலாசைகளை உறுதிப்படுத்தல் விடயம்,   நிலை மாறுகால புனரமைப்பு செயற் பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம் , எதிர்கால தேசிய வேலைத் திட்டங்களில்  முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற் பட  வேண்டிய அவசியம் போன்ற விடயம்கள் ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன. 

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட். எம்.  நதீர் தலைமையில் இடம்பெற்ற இவ்  மாநாட்டில் அதன் செயலாளர் பொறியலாளர் எம்.எம்.எம்.நளீம், பொருலாளர் , எம்.ஏ.ஜி.எம். சபீர்  உட்பட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மடடக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை  சேர்ந்த சமூக பெரியார்கள், புத்திஜிவிகள், சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் என பல பிரிவுசார் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

இம் மாநாட்டின் இறுதியில் 'வடக்கு கிழக்கு  எந்தவகையிலும் இணைக்கப்படக் கூடாது' எனும் பிரேரனை நிறைவேற்றப்பட்டது.


கருத்துரையிடுக

 
Top