வாழ்வின் எழுச்சி  திணைக்களத்தினால்  இவ்வாண்டு முன்னெடுக்கப் படும்  வாழ்வாதார  செயற்றிடத்தின் கீழ்  திவிநெகும  பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த வேலையற்றிருக்கும்  இளைஞர்களுக்கான  தொழில் வழி காட்டல்  பயிற்சி வழங்கப் படவுள்ளது .
இந்தப்  பயிற்சி நெறி  ஹை டெக்  லங்கா  நிறுவனத்தினால்  வழங்கப் படவுள்ளது.  இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட  கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  30 இளைஞர்கள்   ஹை டெக்  லங்கா  நிறுவனத்திற்கு அனுப்பி  வைக்கப் பட்டனர் 

தொழில் பயிற்சிக்கு  செல்லும் இளைஞர்களை  வழி  அனுப்பி வைக்கும்  நிகழ்வு  கல்முனை பிரதேச செயலகத்தில்  திவிநெகும தலமைப் பீட முகாமைத்துவ  பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம் பெற்ற  போது  பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி  பிரதம அதிதியாகவும்  மற்றும்  திவிநெகும  அதிகாரிகளும்   ஹை டெக்  லங்கா  நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட  இணைப்பாளர் உட்பட  பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .கருத்துரையிடுக

 
Top