கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக  பாடசாலை ரீதியாக  இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1(அ )க்கு  படடதாரிகளை ஆட் சேர்ப்பு  செய்வதற்கான  திறந்த போட்டிப் பரீட்சைக்கான  விண்ணப்பம்  கோரப்  பட்டுள்ளது 

இந்தப் போட்டிப் பரீட்சைக்கு  விண்ணப்பிக்கும்  கிழக்கு மாகாணப்   பட்டதாரிகளுக்கான  உச்ச வயதெல்லை  18 தொடக்கம் 35 எனக் குறிப்பிடப் பட்டுள்ளது .
வரையறுக்கப்பட்டுள்ள வயதெல்லையினால்  கிழக்குப் பட்டதாரிகள் பலர்  பாதிக்கப் படுவதாக  அவர்கள் குற்றம்  சாட்டுகின்றனர் .

கிழக்கு  ஆளுநர் , முதலமைச்சர், கல்வி அமைச்சர்  ஆகியோர்  இவ்விடயத்தில்  கவனம் எடுத்து  வயதெல்லையை  மீள் நிர்ணயம் செய்ய வேண்டும் .அல்லது  அரச தொழில் இல்லாத  விண்ணப்ப தாரிகளுக்கு வயதெல்லைக் கட்டுப் பாடு இல்லை என அறிவிப்பு செய்ய வேண்டும் என  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top