ஜனாதிபதியின் வழிகாட்டலில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் “பச்சைப் பசேல்” என்ற பத்தாயிரம் கிராமத்தை அபிவிருத்தி செய்யும்  வேலைத் திட்டம் இன்று கல்முனையில் ஆரம்பித்து வைக்கப் பட்டது.
இத்திட்டதில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் இன்று (01) சிரமதான பணிகளும் , மர நடுகை வைபவமும் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.கனி தலைமையில் நடை பெற்றது.
நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மாகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கிராம சேவை அதிகாரிகளும்,திவி  நெகும திணைக்கள அதிகாரிகளும், பொருளாதார  அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top