(  அப்துல் அஸீஸ்)

அம்பாறை நீலாவணை  நியுஸ்டார் விளையாட்டு கழகத்தின் 10 வது ஆண்டு  நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் வெற்றிஈட்டியது.

41 அணியினர் கலந்துகொண்ட இந்த சுற்றுப்போட்டித் தொடரின்  இறுதிப்போட்டி நேற்று(21) அம்பாறை  நீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு களுதாவளை  கெனடி விளையாட்டு கழகமும், மட்டக்களப்பு  மண்டூர் அருள்மணி விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன இதில் 9விக்கட்டுக்களால் களுதாவளை  கெனடி விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற அணியினருக்கு 7அடி உயரமுடைய வெற்றிக்கிண்ணத்தினை அதன் தலைவர் பா.பவித்திரன், செயலாளர் பா.சுரேஷ், பொருளாளர் ச. கண்ணன் ஆகியோர்கள் இணைந்து   களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்தின்  தலைவர்  த . நீலாம்பரன்னிடம் வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.

Post a Comment

 
Top