கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை-03 ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய திருக்கதவு  உடைக்கப் பட்டு ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல் வெளியே எடுத்துவரப்பட்டு அதனுள் இருந்த ஆலய காணிக்கைப் பணங்கள் திருடப்பட்டதன் பின்னர் உண்டியல் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று   ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் கல்முனை பொலிலிஸ் நிலைய தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

கல்முனை பொலிலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பாரின் உத்தரவின் பிரகாரம் அம்பாறையில் இருந்து வரவழைக்கப் பட்ட விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு  மற்றும் மோப்ப நாய்  மூலம் துரித விசாரணை நடாத்தப் படுகின்றது.


இந்த  கொள்ளை சம்பவம் தொடர்பாக துரித விசாரணை நடாத்தப்பட்டு விரைவாக சந்தேக நபர் கைது செய்யப் படுவார் என கல்முனை பொலிலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தெரிவித்தத்துடன்  இந்த கொள்ளை சம்பவம்  இன  ரீதியாக நோக்கப் பட வேண்டியதொன்றல்ல .  சந்தேக நபர்  விரைவாக கைது செய்யப் பட்டு  சட்டதின்  முன் நிறுத்தப் படுவார் என்று அவர் தெரிவித்தார்
கருத்துரையிடுக

 
Top