ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுதுறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் கல்முனை தொகுதிக்கான "வீட்டுக்கு வீடு மரம்" வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாளை கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதன்போது பயன் தரும் பல்லின மரக்கன்றுகள் நட்டிவைக்கப்படவுள்ளது.
நிகழ்ச்சி நிரல். காலை 8.30 மணிக்கு மருதமுனை, காலை 10.00 மணிக்கு நற்பிட்டிமுனை, காலை 11.00 மணிக்கு மாளிகைக்காடு, மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது, மாலை 5.00 மணிக்கு கல்முனை.


கருத்துரையிடுக

 
Top