கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ்


(பி.எம்.எம்.ஏ.காதர்ஏ,.எல்.எம்.சினாஸ்)

“உன் மொழியில் தழைக்கிறேன்” கவிதை நூலின் ஆசிரியர் மருதமுனை ஹரீஷா மிகவும் பொறுமையானவர் அந்தப் பொறுமையின் பிரதிபலிப்பு அவரது கவிதைகளில் தெரிகிறது என கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

மருதமுனை ஹரீஷாவின்“உன் மொழியில் தழைக்கிறேன்”கவிதை நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்கில்  ஞாயிற்றுக்கிழமை(24-07-2016)மாலை மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எழுத்தாளரும், உதவிக்  கல்விப் பணிப்பாளருமான கலாநிதி சத்தார் எம் .பிர்தௌஸ்  தலைமையில் நடைபெற்ற  இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும்வி,ஷேட அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியூம் கலந்து கொண்டனர்.

இங்கு ஊடவியலாளரும்எ, ழுத்தாளரும்வி, மர்சகருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா நூல் நயவு ரை நிகழ்த்தினார்ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் சமீம் வரவேற்புரை நிகழ்த்தினார் சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், பிறை  எப்.எம்.கட்டுப்பாட்டாளருமான பஷீர் அப்துல் கையூம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இங்கு நூலின் முதற் பிரதியை  மருதமுனை பறக்கத் டெக்ஸ் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட்இவிஷேட பிரதியை மருதமுனை சறௌ பாம்ஸ் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன்இசிறப்புப் பிரதியை கல்முனை ஏ.எம்.எம்.இண்ஜினியரிங் கண்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர்  ஏ.எம்.எம்.முஸம்மில் ஆகியோர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இங்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ .எல்.ஏ.அஸீஸ் மேலும் உரையாற்றுகையில் :- இந்த மண்டபம் நிறைய பல்துறை சார்ந்த பல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்; சகோதர்களோடு  தமிழ் சகோதர்களும் வந்திருப்பது மருதமுனை ஹரீஷாவின் எழுத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகும் என்றார்.

தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் இந்த விழாவை நடாத்தி நூலை வெளியிட்டு  வைத்தது இந்த நூல் வெளியீட்டு விழாவில் பெரும் அளவிலான எழுத்தாளர்களும்க,விஞர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top