கல்முனை வலயக்  கல்வி அலுவலக நலன் புரிச் சங்கம் ஏற்பாட்டில் கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்தில்  நடை பெற்ற பெருநாள் குதூகலம் கலாச்சார உணவு பரிமாறல்  நிகழ்வு  நேற்று  கல்முனை வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் நடை பெற்றது.

வலயக்கல்வி அலுவலக  நலன்புரிச்சங்க  தலைவர் யூ.எம்.இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  வலையாக கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்   ஜலீல் பிரதம அதிதியாகவும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  வீ.மயில் வாகனம் ,எஸ்,எல்,ஏ,ரஹீம் .பீ.எம்.வை.அரபாத், திருமதி பீ.ஜிஹானா அலிஃப்  மற்றும் வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர் , பொறியியலாளர் ஜீ அருண் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் மற்றும் கோட்ட க்கல்விப்  பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். அம்பாறை வலயக்  கல்வி அலுவலக கணக்காளர் எல்,ரீ . சாலிதீன்  நிகழ்வில்  கலந்து கொண்டார் 

கடந்த நோன்பு பெருநாளை சிறப்பிக்கும் வகையில் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த  பெருநாள் குதூகல சிறப்பு நிகழ்வில்  முஸ்லிம்களின் கலாச்சார உணவுகள்  பரிமாறப்ப பட்டன .


கருத்துரையிடுக

 
Top