அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இவ்வருட நோன்பு பெருநாள்  ஊடக குடும்ப சவாரி -03 ஒன்றுகூடல் நிகழ்வு   எதிர்வரும் சனிக்கிழமை 23ஆம் திகதி  காலை 8.30 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம்  இஸ்மாயில் மாஸ்டர் தோட்டத்தில்  இடம்பெறவுள்ளது.

சம்மேளனத்தின் தலைவர்  கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில்  கலை,கலாசார நிகழ்ச்சிகள், ஊடகவியலாளர்களின் சிறார்களுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் , பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

 
Top