பிரதி அமைச்சர் ஹரீஸ்


ஆளுமை நிறைந்த மூத்த முஸ்லிம் அரசியல்வாதியும்,சிறந்த தொழிற்சங்கவாதியுமான அஷ்ஷெய்க் அலவிமௌலானாவின் மறைவு நாட்டிற்கும் குறிப்பாகமுஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்,ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டுள்ளதனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வளர்ச்சிக்கும் கட்சியினைஆட்சி பீடம் ஏற்றுவதற்கும் அமரர்பண்டாரநாயக்காவுடன் தீவிரமாக செயற்பட்ட ஒருமூத்த முஸ்லிம் தலைவர் மர்ஹூம் அலவிமௌலானா ஆவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காஅவரின் ஆட்சியில் கட்சியில் வளர்ச்சிக்குதந்தையோடு செயற்பட்ட மர்ஹூம் அலவிமௌலானாவை தேசியப் பட்டடியல் மூலம்பாராளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சராக்கி அவரைகௌரவித்தார்.

மர்ஹூம் அலவி மௌலானா தான் அரசியல்வாதிஎன்பதை விட அவர் ஒரு சிறந்ததொழிற்சங்கவாதியாகவே தன்னைஅடையாளப்படுத்துவதில் முனைப்பாகவிருந்தார்.தொழிலாளர்களின் நலன்களில் மிகவும் அக்கறையுடன்செயற்பட்டவர்தான் அமைச்சராகவிருந்த ஆட்சிக்குஎதிராக தொழிலாளர்களின் நலன்களுக்காக வீதிக்குஇறங்கி போராடிய ஒரு தலைமையாகும்.

தனது அரசியல் வாழ்;க்கையில் இனமதவேறுபாடுகளுக்கு அப்பால் சேவை செய்தவர்வடக்குகிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம்எம்.எச்.எம்.அஷ்ரஃப்புடன் இணைந்து குரல்கொடுத்தவர்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும்குடும்பத்தினர்உற்றார்உறவினர்கள்அனைவருக்கும்பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவிப்பதோடுமர்ஹூம் அலவி மௌலானாமறுமை வாழ்வில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்சுவர்க்கம்கிடைக்க பிரார்த்திக்கிறேன் எனவும்தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top