உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு­கடந்த  சனிக்­கி­ழமை இரவு பய­ண­மா­னது.
கிழக்­கு­மா­காண பிர­தம செய­லாளர் அபே­கு­ண­வர்த்­தன, கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் அசங்­க­அ­பே­வர்த்­தன, கிழக்கு மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் எம்.ரி.ஏ.நிசாம் உள்­ளிட்ட இக்­கு­ழுவில் தெரி­வு­செய்­யப்­பட்ட மேல­திக மாகா­ணக்­ கல்­விப்­ப­ணிப்­பா­ளர்கள், வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ளர்கள் கல்­வித்­திணைக்­க­ளத்தில் பணி­யாற்­றும்­நான்கு பொறி­யி­ய­லா­ளர்கள் பிர­தம கணக்­காளர் உள்­ளிட்ட 30பேர்  இக்குழுவில் அடங்குகின்றனர் 
பாட­சா­லை­ முகா­மைத்­துவம் மற்றும் பாட­சா­லை­ ஆசி­ரியர் அபி­வி­ருத்தி தொடர்­பாக இக்­கு­ழு­வினர் அந்­நாட்­டி­லி­ருக்­கக்­கூ­டிய நல்ல அம்­சங்­களை நேர­டி­யாக கண்டு அறி­ய­வுள்­ளனர். இவ்­வம்­சங்­களை கிழக்கில் அறி­மு­கப்­ப­டுத்தி கல்­வி­அ­பி­வி­ருத்­தியை மேற்­கொள்­வது இவ்­வி­ஜ­யத்தின் நோக்­க­மா­க­வுள்­ளது.
12ஆம் திகதி ஆரம்­ப­மான இவர்­க­ளது வெளி­நாட்டு பயணம் 26ஆம் திகதி நிறை­வ­டையும். 
கல்முனை  கல்வி வலயத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் பொறியியலாளர் ஜி.அருண் ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 


Post a Comment

 
Top