பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
களுத்தறை மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்காவிடின், தான் பதவி விலகப்போவதாக நேற்று (29) தெரிவித்திருந்த நிலையில், இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

 
Top