(யூ.எம்.இஸ்ஹாக் )
கொலைக்குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த நான்கு பேருக்கு கல்முனை மேல் நீதி மன்றத்தில் இன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டன.

கடந்த 2009ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 18ஆம் திகதி நிந்தவூரில் வைத்து ஆதம்பாவா முகம்மது மஹ்மூத் எனப்படும் (சமுத்தீன் தண்டயல் )என்பவர் தலையில் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்

இவரது மரணத்துக்கு காரணமாயிருந்து கொலை செய்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த முகம்மது சித்தீக் முகம்மது இப்றாகீம் ,அபுசாலி நௌசாத் ,முகம்மது தம்பி பைத்துல்லா , முகம்மது தம்பி றஸீட் ஆகிய நால்வருக்குமே மரண தண்டனை வழங்கப் பட்டுள்ளது.


கருத்துரையிடுக

 
Top