பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம். ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் குறித்து  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நட்பிட்டிமுனை  மத்திய குழு உறுப்பினர்களும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளரும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான   சீ.எம்.முபீத் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி இளைஞர்   அமைப்பாளர் சீ.எம் ஹலீம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைமை எடுத்துள்ள தீர்க்கமான முடிவுக்கு  கட்சி தலைவரும் அமைச்சருமான  றிசாத் பதியுதீன் அவர்களுக்கும் கல்முனை தொகுதி மக்கள் சார்பிலும் குறிப்பாக நட்பிட்டிமுனை மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவிக்கின்றோம் என  கட்சியின் அமைப்பாளர்களான முபீத்,ஹலீம் ஆகியோர்   அறிவித்துள்ளனர் .


கருத்துரையிடுக

 
Top