(யு.எம்.இஸ்ஹாக்)
 இன்று காலை  கல்முனை வைத்தியசாலையில்  மரணமடைந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஐ .மத்தியு அவர்களின் பூதவுடல்  நாளை செவ்வாய்க்கிழமை (07.06.2016) மாலை கல்முனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.

நாளை காலை 8.00 மணிக்கு  அன்னாரது  இல்லத்தில் இருந்து நீதிமன்ற வீதி வழியாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு மாணவர்களின் பேண்ட் வாத்திய மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்களின்  அஞ்சலி இடம் பெறும் அதன் பின்னர்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட  பிரதேச பாடசாலை பாடசாலைகளின்  அதிபர்கள்,ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தப் பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு  பூதவுடல்  கல்முனை  திரு இருதயநாதர்  ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப் படும் . 
மாலை 4.00 மணிக்கு  ஆலயத்தில் இருந்து  கல்முனை நகர் ஊடாக மரியாதை  ஊர்வலமாக  பூதவுடல் மயானத்துக்கு எடுத்து செல்லப் பட்டு அடக்கம் செய்யப் படவுள்ளது 


கருத்துரையிடுக

 
Top