( அப்துல் அஸீஸ்)


கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகம் (எக்டோ ) ஏற்பாடு    செய்திருந்த பேராசிரியர் மர்ஹும்  ஏ.எல்.எம்.அப்துல் கபூர் அவர்களின் தனி நபர் நூல்சேகரிப்பு  பகுதி  அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எக்டோ நூலக மண்டபத்தில்  இடம்பெற்றது.

கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மிர் தலைமையில் இடம்பெற்ற இன்  நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் , ஓமான் சுல்தான் கபுஸ் பல்கலைக்கழக ஆலோசகருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எச்.தௌபீக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், இதில் கல்வித்துறை அதிகாரிகள்  , வர்த்தக பிரமுகர்கள் ,சமூக  ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்திற்கு ஆலோசகராக இருந்து அதன் அபிவிருத்திக்கு பல வழிகளிலும் உதவி வந்த மர்ஹும்  பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபுர் அவர்கள் நெதர்லாந்தில் வசித்து கொண்டிருக்கும் போது காலாமானார். அன்னாரின் இழப்பு இப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கடந்த 13 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இந்த நூலகத்தில் வாசிக்கும் பகுதி , இரவல் கொடுக்கும் பகுதி ஆகியன மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்போது தனிநபர்  நூல் சேகரிப்பு பகுதியும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுளளது. நெதர்லாந்தில் வசிக்கும் மர்ஹும்  ஏ.எல்.எம்.அப்துல் கபுர் அவர்களின் நண்பர்கள் இந்த நூல்களை  கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதே போன்று முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபரும் , ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான சாய்ந்தமருதைச் சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் கே.எல்.சின்னலெவ்வை ( கே.எல்.அபுபக்கர்லெவ்வை அவர்களின் சகோதரர்)அவர்கள் சேகரித்து வைத்திருந்த நூல்களும் தற்போது தனிநபர் சேகரிப்பு பகுதிக்கு கிடைத்துள்ளதாக கல்முனை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி நிறுவகத்தின் செயலாளர் எம்.பீ.எம்.றிபான் தெரிவித்தார். இதன்  இறுதியில் இராப் போசனத்துடன் கூடிய இப்தார் நிகழ்வும்  இடம்பெற்றது.

கருத்துரையிடுக

 
Top