சவூதி  அரசாங்கத்தால்  இலங்கைக்கு  அன்பளிப்பு செய்யப் பட்ட  பேரீத்தம் பழம் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு  இன்னும் வழங்கப் படவில்லை என அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள்  சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது .

இவ் விடயம்  தொடர்பாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப் , செயலாளர் எம். ஏ.எம். ரஸீன் ஆகியோர் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் ,

நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு   பேரீத்தம் பழம்  விநியோகிக்கும் நடவடிக்கை புனித நோன்பு ஆரம்ப்பிப்பதற்கு முன்னரே முடிந்து விட்ட நிலையில் முஸ்லிம்கள் நிறைந்து  வாழ்கின்ற   அம்பாறை அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப் பட்டுள்ளதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நிறைந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிறைந்துள்ள இம்மாவட்டத்தை நல்லாட்சி  அரசும் புறக்கணிக்கிறது என  சம்மேளனத்தின் செயலாளர்    எம். ஏ.எம். ரஸீன் தெரிவித்தார்  


கருத்துரையிடுக

 
Top