சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  (02) கல்முனை அல் - பஹ்றியா  மகா  வித்தியாலயத்தில் இடம்பெற்றது .

கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவும், கல்முனை அல் - பஹ்ரிய மகா  வித்தியாலயமும் இணைந்து 
'புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்கள்' என்ற தலைப்பில் நடாத்திய  இப் போட்டியில், கலந்துகொண்டு தங்கள் திறனை வெளிக்காட்டிய 120 மாணவர்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அல் - பஹ்றியா  மகா  வித்தியாலய அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் இடம்பெற்ற இந்  நிக ழ்வில்,  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச். முகம்மட் கனி, திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ், அல் - பஹ்ரிய மகா  வித்தியாலய பிரதி அதிபர் எ.ஆதம்பாவா, திவிநெகும வலய உதவி   முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ், திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் உட்பட ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.






Post a Comment

 
Top