கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  A .W .A . கப்பார்  அறிவிப்பு 


நட்பிட்டிமுனையில் தனியார் வகுப்புக்களுக்கு  செல்லும் மாணவிகள் வயது வித்தியாசமின்றி  இளைஞ்சர்களால்  இம்சைக்குட்படுத்தப் படுவதாக  கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . இந்த முறைப்பாடுடை  பெற்றோர்கள் சிலர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  A .W .A . கப்பாரிடம்  தெரிவித்ததை அடுத்து  அவர்களை முறைப்பாடு செய்யுமாறு  அவர் பணித்துள்ளார் .

அதன் பிரகாம்  முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப் படுவதாவது  வகுப்புக்கள்  கலையும்  நேரத்தில்  கூட்டம்  கூட்டமாக  இளைஞ்சர்கள்  சந்திகளில் நின்று கொண்டு பெண் பிள்ளைகளை கிண்டல் செய்வதும்  ,ஒரு மோட்டார்  சைக்களில்  மூன்று பேர்  வேகமாக  அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமாக  ஓடித்  திரிவதனால்  மாணவிகள் அச்சமடைகின்றனர் 

இதனை கட்டுப் படுத்த  நடவடிக்கை எடுக்குமாறும்  இவ்வீதிகளுக்கு  மொடடார் போக்குவரத்துப் பொலீசாரை தினமும் அனுப்பி  இவ்வீதிகளில்  சடடம் ஒழுங்கை  நிலை நாட்டுமாறும் கேட்டுக் கொண்டனர் 

அதன் பிரகாரம்  இதநைட் கட்டுப் படுத்தும்  வகையில்  சிவில் பாதுகாப்பு குழுக்களின்  அவதானிப்பை இவ்விடயத்தில்  இரகசியமாக  பயன் படுத்தி இவ்வாறான விடயங்களில்  ஈடுபடும்  உறுதி படுத்தப் பட்ட  சிலரை கைது செய்து  நீதி மன்றில்  நிறுத்தி  சட்ட நடவடிக்கை எடுப்பேன்  என கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  A .W .A . கப்பார்  தெரிவித்தார் 


கருத்துரையிடுக

 
Top