வைரவர் பூசைக்கு  பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர்  குளத்தில் மூழ்கி மரணம் நிகழ்ந்த சம்பவம் இன்று(03) அன்னமலையில் இடம் பெற்றுள்ளது . 
இன்று மாலை சவளக்கடை போலிஸ் பிரிவுக்குட்பட்ட  அன்னமலை  தாமரைக் குளத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த அன்னமலை  இரண்டை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான  சித்தம்பலம்  அருளம் பலம் என்பவர்  குளத்தில் மூழ்கி சடலமாக மீட்க்கப் பட்டுள்ளார் .

வீட்டில் இடம் பெறவிருந்த வைரவர் பூசைக்கு தாமரைப் பூப்பறிக்க சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது . இன்று மாலை 7.30 மணிக்கு சடலம் மீட்க்கப் பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது 

சம்பவம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

 
Top