( எஸ்.எல். அப்துல் அஸீஸ்)


 சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடாத்திய வாக்காளர் பதிவு தொடர்பாக   பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும்  2நாள் வதிவிடப் பயிற்சிநெறி  கண்டி தேசத்தைக்  கட்டியெழுப்புவோர் அமைப்பின்  பயிற்சி நிலையத்தில் கடந்த 4,5ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

 இதில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்க, மாகாண  மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட ஐம்பது  பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

 கபே அமைப்பின் தேசிய அமைப்பாளரான எ.எ. மனாஸ் தலைமையில் இடம்பெற்ற  இப் பயிற்சிநெறியில் வளவாளர்களாக முன்னாள் தேர்தல் உதவி ஆணையாளரும்,சீதவாக்கே பிரதேச செயலாளருமான பண்டார யாப்பா, சட்டத்தரணி ஹரேந்திர வானக்கள ஆகியோர்கள் உட்பட  கபே அமைப்பின் உயர் மட்ட உத்தியோகத்த்கர்கள் சிலரும்  கலந்துகொண்டனர்.கருத்துரையிடுக

 
Top