சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்த தான நிகழ்வு கல்முனை வடக்கு வைத்திய சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதி தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம் .சலீம் மற்றும் கல்முனை வடக்கு வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர். எஸ்.ரமேஷ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடை பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், இளைஞர்கள் பலர் இதில் கலந்து கொண்டு இரத்தானம் வழங்கினர்.

ஊடகப் பணியோடு கல்வி, கலாசார மற்றும் சமூகப்பணிகள் என பல்வேறுபட்ட சேவைகளை முன்னெடுத்து வரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்ததான நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
கருத்துரையிடுக

 
Top