பிரதியமைச்சர் ஹரீஸ் 

கல்முனை நவீன  நகர அபிவிருத்தி திட்டம் எந்த தடையும் இன்றி  நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண உதவியுடன் முன்னெடுக்கப் படும் எனவும் அதற்க்கு எந்தவொரு தடையும் ஏற்படாது எனவும் கல்முனை பிரதேச அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார் .

கல்முனை பிரதேச  அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  நேற்று (12) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில்  கல்முனை பிரதேச செயளார் எச்.எம்.எம்.கனி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உட்பட கல்முனை மாநகர சபை  உறுப்பினர்களும்  திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பிரத்தின் அமைச்சர்  அங்கு கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்  நாட்டில் பல பிரதேசங்கள் நகர மயமாக்கல் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப் படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன . அதன் அடிப்படையில் ஜனாதிபதி  மைத்திரிபால  ஸ்ரீ சேன  அவர்களின் வழிகாட்டலில்  பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க  அவர்களால்  கல்முனை நகர அபிவிருத்தி  முன்னெடுக்கப் பட்டு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக  அமைச்சரின் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  நடை பெற்றுள்ளன . கல்முனையில் வாழும் எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு  இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப் படும் . இதற்காக  தமிழ் சமுகத்தை சார்ந்த அரசியல் பிரமுகர்களுடன் நாங்கள் பேசி நல்ல முடிவுகளுக்கு வந்துள்ளோம்.

இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற சில காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இந்த விடயங்கள் நடை பெறாது என்று மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள பொய்களை எவரும் நம்பக் கூடாது. இந்த நாட்டின் பிரதமர்  ஒரு நேர்மையானவர் அவர் வாக்களித்தால் எவர் குறுக்கே நின்றாலும் அதனை நிறைவேற்றும்  யோக்கியமான  அரசியல் செய்பவர் . கல்முனை நகர அபிவிருத்திக்கான பணம் பிரதமரால் ஏற்கனவே ஓதிக்கப் பட்டுள்ளது. மேலும்  எமது கட்சியும்  கட்சியின் தலைவருமான  ரவுப் ஹக்கீம் அவர்களும் களமுனைக்கு அப்பால் தென் கிழக்குப் பிரதேச அபிவிருத்தியை மையப் படுத்து துருக்கி நாட்டு அரசாங்கத்துடன் பேசியுள்ளோம் . அந்த நாட்டு  உயர் அதிகாரிகளை அண்மையில் சந்தித்த போது  இதற்கான  ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும்  கடந்தகால நல்லாட்சி அரசின் முன்னெடுப்புக்களால் குறிப்பாக நாடு பூராகவும் நாம் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் . அதிலும் எனது பொறுப்பில் உள்ள  விளையாட்டு துறை அமைச்சின் மூலம் பல  விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப் படவுள்ளன . குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பொது விளையாட்டு மைதானங்கள் ,பாடசாலை மைதானங்கள் அபிவிருத்தி செய்வதற்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
குறிப்பாக நான் பாராளுமன்ற உறுப்பினராக பிரதிநிதித்துவப் படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் பல மைதானங்கள் அபிவிருத்தி காணவுள்ளது அதிலும் கல்முனை சந்தான்கேணி மைதானம் சர்வதேச தரத்தில் அமையவுள்ளது. எமது பிரதேச கல்வி அபிவிருத்தியில் கூடுதல் அக்கறை காட்டி வருகின்றோம் நல்லாட்சி அரசாங்கம் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது  அதன் மூலம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்துள்ளோம் . குறுகிய காலத்தில் எமது கல்முனை பிரதேசம் கல்வி வளர்ச்சியில் ஒரு படி முன்னேறி இருக்கிறது என தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Top