(ஷியாகுல் ஹக்)

தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காய் முன்னின்று தன் உயிரை பழிகொடுத்த மர்ஹூம் யூ.எல். ஆதம்பாவா (பறக்கத்) அவர்களின் மறைவின் 25வது ஆண்டை நினைவுகூறும் வகையில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இருபதுக்கு 20 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கட் இச்சுற்றுப்போட்டி இன்று (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
றினோன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் றிஷாட் செரீப் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ. கப்பார், முன்னாள் விளையாட்டு போதனாசிரியல் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் கழகங்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
26 கழகங்கள் கலந்து கொள்ளும் இச்சுற்றுப்போட்டி விலகல் முறையில் வெற்றியீட்டும் கழகத்திற்கு பெறுமதிவாய்ந்த பறக்கத் கிண்ணத்துடன் ரூபா 20,000.00 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
இச்சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து சாய்ந்தமருது பிலேயின்ஹோஸ் விளையாட்டுக்கழகம் போட்டியிட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பிலேயின்ஹோஸ் 20 ஓவர் நிறைவில் 138 ஓட்டங்களை 8 விக்கட் இழப்பிற்குப் பெற்றுக் கொண்டது.
139 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களை 8 விக்கட் இழப்பிற்குப் பெற்றுக் கொண்டது. இதனால் 29 ஓட்டங்களால் சாய்ந்தமருது பிலேயின்ஹோஸ் விளையாட்டுக்கழகம் இப்போட்டியில் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
இப்போட்டியில் தோல்வியடைந்து இச்சுற்றிலிருந்து விலகிக் கொண்ட ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தினல் றினோன் விளையாட்டுக் கழகத்தினரால் 2002ம் ஆண்டு நடாத்தப்பட்ட பறக்கத் ஞாபகார்த்த சுற்றுப்போட்யின் சம்பியனாக தெரிவாகியமைய இங்கு குறிப்பிடத்தக்கது.






Post a Comment

 
Top