கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் பின்னாலுள்ள குவாட்டஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள 870-ஆம் இலக்க வீட்டின் மீது இன்று  சனிக்கிழமை (14) அதிகாலை 2.30 மணியளவில் உள்நாட்டு தயாரிப்பிலான (அணைப்பு) குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரான அப்துல் சலாம் அஸ்வரின் வீட்டின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் முன் அறை சேதமடைந்துள்ளதுடன் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த அஸ்வரின் தந்தையும் தாயும் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கல்முனைப் பொலிசாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top