இந்த சூறாவளி ”Roanu” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறைக்கு 600 கிலோமீற்றர் வடக்கே நிலைகொண்டுள்ள இந்த சூறாவளி, இலங்கைக்கு அப்பால் நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களிலும் எதிர்வரும் சில நாட்களில் காற்றின் வேகம் துரிதமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேல் பிராந்தியத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதுடன், சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top