மருதமுனை பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்தும்“விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம்”என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி-2016 இன்று  (12-05-2016)வியாழன் காலை 8.30 மணிக்கு  கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்டது .
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.ஹப்பார் தலைமையில் நடைபெற்ற  இந்தச் சுற்றுப்போட்டியின்  ஆரம்ப விழாவில்  அம்பாறை மாவட்டச் செயலாளர் சுசித பி வணிக சிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார் .
 விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.ரணவீர , கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.ஹேமந்த, .கல்முனை தமிழ் பிரிவு  பிரதேச செயலாளர் கே.லவநாதன்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம். அனுசரணையாளர் எம்.ஐ.ஏ.பரீட்(பறக்கத்டெக்ஸ்) ஆகியோருடன்  அதிபர்கள்  ஆசிரியர்கள் பொலிஸ் உத்தயோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு  செய்யப்பட்ட பன்னிரெண்டு முன்னணிப்பாடசாலைகளைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர் அணிகள் பங்கு பற்றின .
இச்சுற்றுப் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு பறக்கத் நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸ் வெற்றிக்கிண்ணமும்,சான்றிதளும்,விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது  மேலும்  இப்போட்டியில்  பங்குபற்றும்   அனைத்து  வீரர்களுக்கும்  சான்றிதழ்கள்  வழங்கப்படவுள்ளது.
Post a Comment

 
Top