கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் வேண்டுகோள் 

அனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள வெளி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளவர்கள் குழுக்கள் ரீதியாக செயற்படாமல் ஒன்று  பட்டு செயல் படுமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார்  தெரிவித்துள்ளார் .

கல்முனை பிரதேசத்தில் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக நிவாரணம் திரட்டும் பணிகளில் பலர்  குழுக்களாக செயல் படுகின்றனர்  இதனை தவிர்த்து பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணப் பொருட்களை திரட்டி உரியவர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவும்.

குழுக்கள் ரீதியாக செயல் படுவதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன . இதனால் குழுக்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்படுகின்றது . எனவே  உதவும் நோக்கத்தில்  செயல் பட விரும்புபவர்கள் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராம சேவை உத்தியோகத்தர்களை பயன் படுத்தி நிவாரணங்களை திரட்டுமாறு பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் அனைவரிடமும் கேட்டுள்ளார் . 

Post a Comment

 
Top