கல்முனை மாநகர சபை  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம். முபீத்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான  றிஷாத்  பதியுதினிடம்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  கல்முனையில் ஒரே நேரத்தில் இரண்டு சதோஷ  கிளைகளை திறப்பதற்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக முபீத் தெரிவித்தார் .

இன்னும் இரண்டு வாரத்தில் கல்முனை பிரதேசத்தில் இந்த சதோஷ கிளை நிறுவனங்கள் திறக்கப் பட்டு  நீண்டகால தேவையாக இருந்த மக்களின் குறை நிவர்த்திக்கப் படும் எனவும் முபீத் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top