( அப்துல் அஸீஸ்)

கல்முனை திவிநெகும வலயப்பிரிவை சேர்ந்த திவிநெகும சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கான  தொழில் முயற்சி உபகரணம்கள் வழங்கும் நிகழ்வு நேற்று  கல்முனை  வலயப்பிரிவில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த திவிநெகும சீட்டிழுப்பு வெற்றியாளர்கள் 11பேர்களுக்கு தலா ரூபா 150,000/- ,விகிதம், தொழில் முயற்சி, வீடு திருத்தப்பணி, ஆகிய முன்னெடுப்புகளுக்காக தெரிவுசெயப்பட்டவர்களில்லிருந்து இரு குடும்பங்களுக்கான தொழில் முயற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வே நேற்று  இடம்பெற்றது.


திவிநெகும வங்கி ,வலய  முகாமையாளர் எஸ்.எஸ். சதீஸ்  தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் ஹனி, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top