அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தின விழா  இன்று காலை சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம் பெற்றது. 
கல்முனை வை.எம்.சி.ஏ. முன்பாக ஆரம்பித்த மே தின ஊர்வலம் களமுனை நகர் ஊடாக சென்று வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் பொதுக் கூட்டமும் நடை பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோடீஸ்வரன் ,கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன்,ஆரிப் சம்சுதீன் ,கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன்  உட்பட  சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் அங்கத்தவர்கள் என் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆயுட்கால தலைவரான சங்க தலைவர்  லோகநாதன் உட்பட ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் அங்கு கௌரவிக்கப் பட்டதுடன் மே தினக் கோரிக்கை பிரகடனமும் வெளியிட்டு வைக்கப் பட்டன .Post a Comment

 
Top