களனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக உயர்வடைந்துள்ளதையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ வெல்லம்பிட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இன்றைய தினத்திலும்  காலை களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்திருந்தது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தது என தெரிவிக்கப்படுகிறது . இதனால் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன .
அதேவேளை இன்றைய தினம் வரைக்கும் நாட்டில்   ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகள் எண்ணிக்கை 58 பேர் வரை அதிகரித்துள்ளன.  மேலும்  134 க்கும் மேற்பட்டோரை  காணவில்லை.  3 இலட்சத்து 6 ஆயிரத்து 773 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.


கருத்துரையிடுக

 
Top